தங்களுடன் வேலை செய்பவரும் தங்களை வேலையிடத்திற்கு அழைத்து செல்பவரையும் கண்டதும் நட்பு கொண்டதாக இந்த 45 வயதான இரட்டை சகோதரிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். தங்கள் வாழ்வில் அனைத்து உறவுகளையும் புறந்தள்ளி வந்த இந்த கங்கா மற்றும் ஐமுனா எனும் 45 வயதான இரட்டையலரே இந்த புதிய உறவு வளையத்தினுள் வந்தவர்கள் ஆவார்கள். இவர்களை தனது நட்பு வட்டத்தில் இணைத்துக்கொண்டவர் யசிமுடின் அகமட் என்பவர்.
கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் இவர்கள் ஒன்றிணைந்துள்ளனர். அகமதுடன் பழக ஆரம்பித்ததும் இவர்தான் எமக்கு உரியவர் என்பதனை நாம் இருவரும் புரிந்துகொண்டோம். அதேபோன்று அகமதுவும் நடந்து கொள்கின்றார் என்றனர். இவ்விரு இரட்டையர்கள் பற்றி கூறிய அகமது எனது வாழ்க்கை என்பது இவ்விருவர்களுடன்தான் என்றார் கங்கா ஐமுனா இருவரும் தங்கள் வாழ்க்கைக்காக சேக்கஸ் ஒன்றில் வேலை செய்து வருகின்றனர். அதே இடத்தில் வேலை செய்யும் அகமதுவை நல்ல நண்பனாக கொண்டுள்ளனர். 45 வயதான சிலந்தி சகோதரிகள் என்று பரவலாக அறியப்பட்ட இருவரினதும் உடல் அமைப்பால் தனிமைப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது இவர்கள் வாழ்விலும் காதல் பூத்துள்ளது. பாடசாலை ஒன்றின் ஆசிரியருமான அகமது என்பவர்தான் இவர்களுக்கு சிறந்த நண்பனாக மாறியுள்ளார். தற்போது நாம் இருவருமே மிகவும் மகிழ்ச்சிக்குரியவர்கள் நாம் வாழ்வில் சந்தித்த இவர்தான் எங்கள் வாழ்க்கை மற்றும் நல்ல நண்பன் என்றனர். உருவத்தில் இவர்களுக்கு 3 கால்கள் மற்றும் 4 கைகள் உள்ளன.
கடந்த காலங்களில் பல பிரச்சனைகளை சந்தித்த எங்களுக்கு எதிர்காலத்தில் அகமதுவுடன் சந்தோகமாகவே கழிக்க விரும்புகின்றோம் என்று சொன்னார்கள். மேற்கு வங்காளத்தில் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர்கள் இவர்கள். இவர்களுக்கு ஒரு வயிறு, இரண்டு இதயங்கள், சிறுநீரகங்கள் மற்றும் ஈரல்கள் உள்ளன. கடவுளின் கோபம்தான் இந்த வடிவத்திற்கு காரணம் என்று கருதிய இவர்களது பெற்றோரினால் இவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை அதேவேளை வேண்டாம் என்று விட்டுவிடவும் முடியவில்லை. போதாதற்கு போதியளவு கல்வியறிவும் இவர்களுக்கு இல்லை. ஆகவே வித்தைகள் காட்டும் குழுவான சேக்கஸ் குழுவில் இணைந்து இந்தியாவின் பல பாகங்களுக்கும் சென்று வித்தைகள் காட்டி பிழைத்து வருகின்றனர். இவர்களது வாழ்வில் அகமதுவின் வருகை என்பது மிகவும் ஒரு முக்கியமான காலமாக பார்க்கின்றனர். இவர்கள் சேக்கஸ் ஒன்றில் ஒரு நாளில் 1500 இந்திய ரூபாய்கள் உழைப்பார்கள். இதுவே நாளடைவில் அவர்களுக்கு மிகவம் கடினாமாக இருந்துள்ளது. வேலை முடித்த தாமதமாக வரவேண்டிய சந்தர்ப்பங்களை போக்குவரத்து பிரச்சனை காரணமாக தவிர்க்க ஆரம்பித்தனர். இந்த நிலையில்தான் அகமது ஊக்கம் கொடுத்து தொடர்ந்தும் வேலை செய்வதோடு தான் உதவியாக இருப்பதாக உறுதிமொழி கூறியுள்ளார். அகமது பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமைபுரிந்துகொண்டே இவர்களுடன் சேக்கஸில் ஒலி அமைப்பாளராக கடமை புரிந்து வருகின்றார். ஆரம்பத்தில் நட்பாக இருந்தவர்கள் நாளடைவில் தங்கள் சோகங்கள் துக்கங்களும் மற்றும் மகிழ்ச்சி என்பனவற்றை பகிர ஆரம்பித்துள்ளனர். அப்படி பகிர்ந்து கதைத்தபோதுதான் தங்கள் மூவருக்கும் இடையில் ஒரு உறவு உள்ளதை கண்டுகொண்டனர். அகமதுவுக்கு மிகவும் சிறந்த நகைச்சுவையுணர்வு உள்ளதாகவும் அது தங்களுக்கு மிகவும் பிடித்துபோயுள்ளதாகவும் கூறினர். நாம் அகமதுவை மிஸ்டர் இந்தியா என்று தான் அழைப்போம் என்றனர்.
சில வேளைகளில் விடிய விடிய கதைத்துக் கொண்டே இருப்பது வழக்கம். அனைவரும் இணைந்து இசை விரும்பி கேட்போம் என்றனர். ஏனைய உறவுகளை போலவே நமது உறவும் அன்பு நட்பு மற்றும் வேடிக்கை நிறைந்தது என்றனர். அகமது பாடசாலையில் வேலை செய்துகொண்டே இவர்கள் இருவரையம் சேக்கஸிற்கு அழைத்து செல்வார். ஆயினும் அகமதுவை திருமணம் செய்துகொள்ள மாட்டோம் அதற்கு சமூகமும் அனுமதிக்கமாட்டாது என்றனர். எங்களுடன் அகமது பழகுவது எங்களுக்கு ஒரு நம்பிக்கையை தருகின்றது. இந்த உறவு நீடிக்கவே விரும்புகின்றோம். இந்த சிறந்த நண்பர் இல்லாவிட்டால் எமது வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்றனர்.
















