அமெரிக்க நாட்டில் கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி இரட்டை கோபுரங்கள் தலிபான் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். அமெரிக்க அரசு பலியானவர்களின் குடும்பங்களுக்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்கியதோடு பலியானவர்களின் குடும்பத்திற்கு ஒரு தேசிய கொடியையும் வழங்கியது. அந்த கொடியை ஒவ்வொருவரும் தங்கள் வீட்டின் முன்னால் பறக்கவிட்டிருந்தனர். அதை ஒரு பெருமையாகவே கருதி வந்தனர்.
அமெரிக்காவில் உள்ள Long Island என்ற பகுதியை சேர்ந்த Melissa Brengel, என்ற பெண் இரட்டை கோபுர தாக்குதலில் தனது சகோதரரை இழந்தவர். இவருக்கும் ஒரு அமெரிக்க கொடி அரசால் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த கொடியை இவர் கம்பீரமாக தனது வீட்டின் முன்னால் பறக்கவிட்டிருந்தாஅர்.ஆனால் அந்த கொடி கடந்த 4ஆம் தேதி திடீரென காணாமல் போனது.
இதனால் Melissa Brengel, கடும் அதிர்ச்சியடைந்து ஃபேஸ்புக்கில் தனது வருத்தத்தை பதிவு செய்தார். அந்த கொடியை தன்னுடைய சகோதரரின் நினைவாகவும், அரசு கொடுத்த மரியாதையாகவும் தான் கருதுவதாகவும், அந்த கொடியை எடுத்து சென்றவர்கள் திருப்பிகொடுத்தால் அதற்கு பதிலாக அவருக்கு தகுந்த பரிசுகளை கொடுப்பதாகவும் தனது ஃபேஸ்புக்கில் அவர் கூறியிருந்தார்.
அவர் ஃபேஸ்புக்கில் பதிவு செய்த நான்கு நாட்களில் அவருடைய வீட்டிற்கு ஒரு பார்சல் வந்தது. அதில் காணாமல் போன கொடி இருந்தது. மேலும் அந்த கொடியை பேக் செய்த கவரில் “‘I am so sorry. I had no idea.” என்று எழுதப்பட்டிருந்தது. அந்த கொடியை திருடிச்சென்ற திருடன் ஃபேஸ்புக் பதிவை பார்த்து மனம் திருந்தி மீண்டும் அந்த கொடியை அனுப்பியிருப்பது தெரியவந்துள்ளது. கொடி கிடைத்ததால் Melissa Brengel, மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். கொடியை திருடிச்சென்ற திருடனுக்கும் நாட்டுப்பற்று இருப்பதையே இந்த சம்பவம் காட்டுவதாக Melissa Brengel, குடும்பத்தினர் கருதுகின்றனர்.
















