பிரித்தானியாவில் உள்ள குளொஸ்டர் மாநிலத்தில் உள்ள, ட்ரெட்வோர்த் நகரில் வசித்து வந்த கிங்ஸ்லி வர்ணகுலசூரிய என்னும் சிங்கள கடையரை நீதிமன்றம் குற்றவாளி என இனம்கண்டுள்ளது.
47 வயதாகும் வர்ணகுலசூரிய சமீபத்தில் கொழும்பில் இருந்து பிரித்தானியா வந்த நபர் ஆவார். இவர் சுமார் 7 தடவை வயது குறைந்த சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், ஒரு 13 வயதுப் பெண்ணுடன் பாலியல் உறவை வைத்துக்கொண்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இவரிடம் ஏராளமான சிறிமிகளின் நிர்வாண போட்டோக்களும் இருந்துள்ளது. இவை அனைத்தையும் கைப்பற்றிய பிரித்தானியப் பொலிசார், இவரை குளொஸ்டர் கிரவுன் நீதிமன்றின் முன்னால் நிறுத்தினார்கள். ஆனால் வர்ணகுலசூரிய தனது குற்றத்தை தொடர்ந்து மறுத்து வந்தார். இன் நிலையில் இதனை நிரூபிக்க பொலிசார் படாத பாடு பாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள் இதனை நீதிமன்றில் சொல்ல தயாராக இருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தான் அவர்கள் முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் விடுவார்களா பிரித்தானியப் பொலிசார். இது குற்றதடுப்பு சிறப்பு பொலிசாரின் கைகளுக்கு மாற்றப்பட்டது.
இன் நிலையில் நேற்று நடைபெற்ற நீதிமன்ற விவாதத்தில் கிங்ஸ்லி வர்ணகுலசூரிய ஒரு குற்றவாளி என்று நிரூபனமானது. இதனையடுத்து அவருக்கு 8 வருட சிறைத்தண்டனையை நீதிபதி வழங்கினார்.
இருப்பினும் அவர் 6 வருடம் சிறையில் இருக்கவேண்டும் என்றும், 2 வருட ஒத்திவைப்பு சிறைத்தண்டனை வழங்குவதாகவும் கூறிய அவர் பொலிசார் விரும்பும் பட்சத்தில் வர்ணகுலசூரியவை இலங்கைக்கு நாடு கடத்தலாம் என்று பரிந்துரைத்தார். தண்டனைக் காலம் முடிவடைந்ததும் அவரை தாம் இலங்கைக்கு நாடு கடத்த உள்ளதாக , குளொஸ்டர் ஷியர் பொலிசார் தற்போது திட்டவட்டமாக அறிவித்துள்ளார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். இந்த வழக்கு தொடர்பாக அதிர்வு இணையம் ஏற்கனவே செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது. தற்போது இன் நபரின் புகைப்படமும் கிடைக்கப்பெற்றுள்ளது.
















