நடுரோட்டில் நிர்வாணமாக உட்கார்ந்து யோகா செய்த 51 வயது பெண் கைது. அமெரிக்காவில் பரபரப்பு.

yoga-woman-arrestedஅமெரிக்காவில் Marion County என்ற பகுதியில் 51 வயது பெண் ஒருவர் நடுரோட்டில் நிர்வாணமாக யோகா செய்து கொண்டிருந்தவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் அவர் ஹெராயின் என்ற போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது தெரிய வந்துள்ளது.

Marion County பகுதியை சேர்ந்த Michele Rene Cernak என்ற 51 வயது பெண், கடந்த புதன்கிழமை மாலை 3.30 மணியளவில், அங்குள்ள பிசியான 300 block of Southeast Sanchez Avenue என்ற சாலை ஒன்றில் நிர்வாணமாக நடுரோட்டில் உட்கார்ந்து யோகா செய்துகொண்டிருந்தார். இதனால் அவ்வழியே சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறையினர்களுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் Michele Rene Cernak அவர்களை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் தன் கையில் ஹெராயின் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட Michele Rene Cernak மீது பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு Marion County நீதிமன்றம் 10 வாரம் ஜெயில் தண்டனையும், $5000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

Tags: , ,

Leave a Reply