தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் சிம்பு. கோலிவுட்டில் பெரும் பரபரப்பு

velaiyilla-danushதனுஷ், அமலாபால், சரண்யா, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்து வேல்ராஜ் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள திரைபடம் ‘வேலையில்லா பட்டதாரி’. இந்த படத்தின் ஆடியோ வெளியீடு மற்றும் பிரஸ்மீட் ஆகியவை முடிந்திருக்கும் நிலையில் இந்த படத்தை தனுஷ் தனது 25வது படம் என்பதால் மிகவும் எதிர்நோக்கி உள்ளார்.

இந்நிலையில் பல பிரச்னைகளைத் தாண்டி விஜய்சந்தர் இயக்கும் வாலு படமும் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. சிம்பு, ஹன்சிகா நடிப்பில் வெளியாகவுள்ள இந்த படமும் அவரது ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்துடன் சிம்பு நடித்திருக்கும் ‘வாலு’ படத்தின் டிரெய்லர் இணைக்கப்பட்ட உள்ளதாக கோலிவுட் வட்டாரம் கூறுகிறது. அதுமட்டுமின்றி சிம்பு – நயன்தாரா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் டீஸரும் தனுஷ் படத்துடன் சேர்ந்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. சிம்பு , தனுஷ் இருவரும் சேர்ந்து ஒரே படத்தில் இதுவரை நடித்ததில்லை எனினும் ஒருவர் படத்தில் இன்னொருவரின் டிரைலர், டீஸர் வெளிவருவது இரு நடிகர்களின் ரசிகர்களுக்கும் ஆரோக்கியமானதுதான் என்கிறது கோலிவுட்.

Tags: , ,

Leave a Reply