அவுஸ்ரேலியாவில் உள்ள இலங்கை அகதிகள் மனோ ரீதியாக பாதிக்க பட்டுள்ளதாக அவுஸ்ரேலியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .
டோணி அபட் தலைமையிலான புதிய அரசாங்கம் அகதிகள் தொடர்பான புதிய சட்ட நடவைக்கை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அது சுட்டி காட்டியுள்ளது .
இதன் கிழ் அகதிகளை நவுரு ,மற்றும் பப்பு நியுகினிய போன்ற முகாம்களில் முகாமிட்டு தங்கவைக்கப் பட்டுள்ளனர் .
அத்துடன் கிறிஸ்மஸ் தீவிலும் விலவுட் முகாமிலும் கால வரையின்றி அநேகமானோர் தடுத்து வைக்கப்படுள்ளனர்.
அவர்களின் அகதி அந்தஸ்து வழங்கும் செயற் பாடுகள் உரிய முறையில் மேற்கொள்ள படாத நிலையில் அவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி யுள்ளதாக வும் ,சிறுவர்கள் கல்வி செயற்பாடுகள் அவர்களின் எதிர் காலம் குறித்து கவலையில் பெற்றோர்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது .
இந்த நிலையில் அவர்கள் பாரிய மனோ ரீதியான பாதிப்புக்குள் இருப்பதாக அது மேலும் தெரிவித்துள்ளது .
















