ஊடகவியலாளர்களை மிரட்டிய கடற்படை; வலி.வடக்கில் சம்பவம்

reporter-lkவலி.வடக்கில் கடற்படையினரால் நில சுவீகரிப்பு தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் கடற்படையினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். வலிகாமம் வடக்கில் உள்ள தனியார் காணிகளை கடற்படையினரின் தேவைக்கு காணி அளவீடு செய்வதற்காக அளவீட்டாளர்கள் நேற்று அழைக்கப்படனர்.

குறித்த செய்தியினை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் கடற்படையினரால் அச்சுறுத்தப்பட்டனர். இதன்போது இது எங்களது பகுதி இதற்குள் புகைப்படம் எடுக்க கூடாது என்றும் தங்களை புகைப்படம் எடுப்பதை தவிர்க்குமாறும் மிரட்டியதுடன் தங்களது கைத்தொலைபேசி மற்றும் புகைப்படக் கருவிகள் மூலம் ஊடகவியலாளர்களை துரத்தித் துரத்திபுகைப்படமும் எடுத்தனர்.

மேலும் குறித்த செய்தியை ஊடகவியலாளர்கள் சேகரிக்க கூடாது என்பதை குறிக்கோளாக கொண்டே கடற்படை அச்சுறுத்தலை மேற்கொண்டிருந்தனர். எனினும் ஒரு கட்டத்தில் ஊடகவியலாளர்களை கடற்படை புகைப்படம் எடுக்க ஊடகவியலாளர்கள் கடற்படையையும் புகைப்படம் எடுத்துக் கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags: ,

Leave a Reply