விபசாரத்தில் ஈடுபட்ட ஆறு பெண்கள் உட்பட 16 பேர் கைது!

prostitutionவிபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆறு பெண்கள் உட்பட 16 பேரை, கட்டுநாயக்க பொலிஸார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் ஆணையின் பிரகாரமே ,ந்த தேடுதல் நடவடிக்கை ஹல்கஸ்தோட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 16 பேரையும் கட்டுநாயக்க நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply