ஏற்கனவே சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி நடித்த ‘மதகத ராஜா’ திரைப்படம் முடிவடைந்தும் வெளிவராத நிலையில், சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் விஷால் மீண்டும் நடிப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வெளியாகியுள்ளன.
நேற்றூ முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாகவும் சுந்தர்.சி தனது டுவிட்டரில் கூறியுள்ளார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கவுள்ளார். விஷாலுடன் ஹன்சிகா முதல்முறையாக ஜோடி சேர்ந்தாலும் சுந்தர் சி இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பது 3வது முறையாகும். ஏற்கனவே ஹன்சிகா தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை ஆகிய படங்களில் சுந்தர் சியின் இயக்கத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முழு நீள காமெடி மற்றும் பொழுதுபோக்கு படமாக அமையும் இந்த படத்தில் காமெடி கேரக்டரில் சதீஷ் நடிக்கிறார். இவர் ‘எதிர் நீச்சல்’, ‘மான் கராத்தே’ ஆகிய படங்களில் காமெடியில் கலக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு ‘ஆம்பள’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
விஷாலிடம் ஹன்சிகா “நீயெல்லம் ஒரு ஆம்பளையா? என உசுப்பிவிடுவதால் ஏற்படும் விளைவுகளைத்தான் தனது காமெடி திரைக்கதையில் மூலம் படம் முழுவதும் கூறுகிறாராம் சுந்தர் சி
















