இறந்த மகனின் இருதயம் பொருத்தப்பட்ட இளைஞனைக் கண்டுபிடித்த தாய்: அதிர்சியில் உறைந்த வைத்தியர்.

motherபிரித்தானியாவைச் சேர்ந்த தாய் ஒருவர் தனது மகனின் இருதயத்தை பொருத்தியுள்ள நபரை அவர் குரலை வைத்தே கண்டு பிடித்துள்ளார். பிரித்தானியாவின் ஃப்ரிடா கார்டரின் மகனான ஜான் என்பவர் மூளை காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். இவர் இறந்த பின்னர் அவரது குடும்பத்தாரின் விருப்பத்துக்கேற்ப அவரது உடலுறுப்புக்கள் தானம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜானின் இருதயம் ஸ்காட் என்பவருக்கு பொருத்தபட்டுள்ளது.

உடல் உறுப்புக்கள் தானமாக வழங்கப்பட்டால் அது தொடர்பான விபரங்களை வெளியிடக் கூடாது என்பது மருத்துவ சட்டம். இதன்படி கார்டர் மற்றும் அவரது கணவருக்கு தமது மகனின் இதயம் ஸ்காட் என்பவருக்கு பொருத்தப்பட்டுள்ளது என்பதை தவிர வேறு எந்த விபரமும் மருத்துவர்களால் வழங்கப்படவில்லை. இது இவ்வாறு இருக்க 6 வருடங்களுக்கு பிறகு கார்டரும் அவரது கணவரும் கலந்து கொண்ட விழா ஒன்றில் பேசிய ஸ்காட் ரூதர்போர்ட்டின் குரலைக் கேட்ட கார்டர் இது தனது மகனின் இருதயம் பொருத்தப்பட்ட இளைஞனாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கார்டர் கூறுகையில்- தனது மகனின் இருதயம் உள்ளவரை சந்திப்பதற்கு தான் நீண்ட நாட்களாக காத்திருந்ததாகவும்- பல வருடங்களாகியும் இப்போது சந்தித்தது மிகுந்த சந்தோசத்தை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதேவேளை கார்டரை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்ட ஸ்காட தனக்கு மீண்டும் உயிரளித்த ஜான் மற்றும் அவரது குடும்பத்தாரிற்கு தான் மிகுந்த கடமைப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் ஸ்காட் மற்றும் கார்டர் குடும்பத்தினர் இடையேயான தொடர்புகளை குறைத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply