லண்டனில் ‘கத்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழா. ராஜபக்சே கலந்து கொள்வாரா

vijay-1728x800_c (1)விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் கத்தி படத்தின் படப்பிடிப்பு 80% முடிந்துவிட்டது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை செப்டம்பர் 20ஆம் தேதி பிரிட்டன் தலைநகர் லண்டனில் பிரம்மாண்டமாக நடத்த படத்தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார்.

இப்படத்தினை லைக்கா நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என கூறிவரும் நிலையில் பாடல் வெளியீட்டு விழாவை தமிழகத்தில் வைத்தால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் லண்டனில் இசை வெளியீட்டு விழாவை வைப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த இசைவெளியீட்டு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே அல்லது அவருக்கு நெருக்கமானவர்கள் கலந்துகொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறபடுகிறது.

இலங்கை தமிழரான லைக்கா நிறுவனத்தின் உரிமையாளரின் பிறந்தநாள் செப்டம்பர் 20ஆம் தேதி லண்டனில் மிக பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதே விழாவில் கத்தி படத்தின் இசையையும் வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவை லண்டனில் நடத்த லண்டன் தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவர்கள் விஜய்க்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளதாகவும் இந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் கோருக்கை விடப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply