காதல் தோல்வியால் உதயநிதி, நயன்தாரா தற்கொலை முயற்சியா? திடுக்கிடும் தகவல்

nayanthara-udayanidhi-suicideதமிழகத்தில் பிரபலமாக உள்ள ஒரு வாரபத்திரிகை , உதயநிதி மற்றும் நயன்தாராவின் காதல் செய்தி குறித்தும் அந்த காதல் தோல்வி அடைந்ததால் நயன்தாராவும், உதயநிதியும் தற்கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் பரபரப்பாக செய்தி வெளியிட்டுள்ளது. முதலில் நயன்தாரா உதயநிதியின் காதலை ஏற்றுக்கொண்டதாகவும், பின்னர் மறுத்ததால் மனமுடைந்த உதயநிதி தற்கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், இந்த விஷயம் கேள்விப்பட்ட நயன்தாராவும் தன்னுடைய கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் செய்திகள் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என கோலிவுட் பிரபலங்கள் கூறுகின்றனர்.

நயன்தாரா மற்றும் உதயநிதிக்கு நெருக்கமானவர்கள் இதுகுறித்து கூறும்போது,

ராஜா ராணி இயக்குனர் அட்லீ

இயக்குனர்கள் அதிகமாக விரும்பும் நடிகை நயன்தாரா. செட்டில் ஏதுவும் பேச மாட்டார் , நட்புடன் அனைவரிடமும் பழகுவார். ஷூட்டிங்கிற்கு நேரத்தோடு வருவார், நேரத்தோடு செல்வார், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார், உதயநிதியுடன் அவரை பற்றி வெளியாகி இருக்கும் செய்தி முற்றிலும் தவறானது

உதயநிதியின் நெருங்கிய நண்பர் – இயக்குநர் ராஜேஷ்…

இந்த செய்தியே முதலில் தவறானது. உதயநிதி பின்னாடி தாத்தா, அப்பா என குடும்பம் முழுவதும் அரசியல் பின்னணி இருந்ததால் எந்த ஒரு விசயத்திலும் ரொம்ப கவனமாக இருப்பார். மனைவி மற்றும் குழந்தைகளிடம் அன்பாக இருப்பார் , சினிமாகாரர்களை வைத்து பேர் எடுத்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட மாட்டார் . ஓகே ஓகே.,யில் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக இருந்தாலும், ஹன்சிகாவுடன் மரியாதையோடு பழகினார், எப்போதும் அவரது வேலையில் கவனமாக இருப்பார்

அதேப்போல் நயன்தாரா ரொம்ப டெடிகேஷன் உள்ள பொண்ணு , ஷூட்டிங் எத்தனை மணிக்கு வைத்தாலும் முதல் ஆளாய் இருப்பார், செட்டில் அதிகம் பேச மாட்டார், நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்

வெறும் பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவே இந்த செய்தி பொய்யாக வெளியானதா? அல்லது உண்மையிலேயே உதயநிதியும், நயன் தாராவும் தற்கொலைக்கு முயற்சி செய்தார்களா? என்பதை இன்னும் பல கோலிவுட் பிரபலங்கள் உறுதியாக சொல்ல முடியவில்லை என்கின்றனர்.

Tags: , , ,

Leave a Reply