அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டமளிப்பு விழாவுக்கு ஆள் பிடிக்கும் விஜய்!

vijay-pasuசமகால நடிகர்களில் விளம்பரம் தேடிக்கொள்வதில் வெறி பிடித்து அலைபவர் விஜய் ஒருவர்தான்.

பத்திரிகைகளில் தன்னைப் பற்றிய செய்தியை வர வைப்பதற்காக எதையும் செய்யத்தயங்காதவர் – மோடியை சந்தித்தது உட்பட.
ஏழை மாணவர்களுக்கு பத்து ரூபாய் மதிப்புள்ள ஸ்கூல் நோட்டை கொடுத்துவிட்டு, பத்தாயிரத்துக்கு பப்ளிசிட்டி செய்து கொள்பவர்தான் விஜய்.

இவர் அவ்வப்போது பசுதானம் செய்வதெல்லாம் கூட பப்ளிசிட்டிக்காகத்தான்.

பத்திரிகைகளில் செய்தி வரும், பப்ளிசிட்டி கிடைக்கும் என்று தெரிந்தால் பன்னியைக் கூட தானம் செய்து போட்டோ எடுத்து மீடியாக்களுக்கு அனுப்ப தயங்கமாட்டார் விஜய்.

இப்படி எல்லாம் பப்ளிசிட்டிகாக அலையும் விஜய்யின் பலவீனத்தைப் புரிந்து கொண்டு அடுத்த சூப்பர் ஸ்டார் என்று விஜய்யை அறிவித்தது குமுதம்.

அதற்கே ஆஸ்கார் விருது கிடைத்ததுபோல் துள்ளிக்குதித்த விஜய்க்கு அடுத்த அல்வாவையும் கொடுத்தது குமுதம்.

அதாவது ஆகஸ்ட் 15 அன்று மதுரையில் விழா எடுத்து, அவ்விழாவில் விஜய்க்கு சூப்பர்ஸ்டார் பட்டத்தை சூட்டப்போவதாக குமுதம் சொன்னதும் விஜய்க்கு தலைகால் புரியவில்லை.

எங்கோ உள்ள மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் இப்படி ஒரு விழா நடந்து, அந்த விழாவில் சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தால் பப்ளிசிட்டி கிடைக்காது என்று ஃபீல் பண்ணினாராம் விஜய். எனவே அந்த விழாவில், திரையுலகில் உள்ள முக்கிய பிரமுகர்கள்..குறிப்பாக நடிகர்கள் நடிகைகள் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பி இருக்கிறார்.

இது குறித்து தன் விருப்பத்தை குமுதம் நிர்வாகத்திடம் தெரியப்படுத்திய விஜய், சூப்பர் ஸ்டார் பட்டமளிப்பு விழாவுக்கு ஒட்டுமொத்த திரையுலகத்தையும் மதுரைக்கு திரட்டிக்கொண்டு வரும் பொறுப்பையும், செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாக கூறி இருக்கிறாராம்.

இதற்கு குமுதம் சந்தோஷமாக சம்மதம் சொல்ல, தன்னுடைய பி.ஆர்.ஓ. பி.டி.செல்வகுமார், டைரக்டர் செல்வபாரதி ஆகியோரிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்.

இவர்கள் இருவரும் அனைத்து நடிகர் நடிகைகளையும் சந்தித்து, அங்கிருந்தபடியே விஜய்க்கு போன் போட்டு அவரை பேச வைக்கின்றனர்.
போனிலேயே அவர்களை மதுரைக்கு வரும்படி உருகி உருகி அழைப்புவிடுக்கிறார் விஜய்.

விஜய்யே வருந்தி வருந்தி அழைப்பதால் அவரது அழைப்பை தட்டமுடியாமல் கண்டிப்பாக விழாவுக்கு வருவதாக உறுதி அளித்துள்ளனர் பல நட்சத்திரங்கள்.

மதுரை விழாவுக்கு வருவதாக விஜய்யிடம் உறுதி அளித்தாலும், விஜய்க்காக மதுரை சென்றால் ரஜினி என்ன நினைப்பாரோ என்ற குழப்பத்திலும் உள்ளனர் திரையுலகத்தினர்.

Tags: , ,

Leave a Reply