சீனாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி. பெரும் பதட்டம்.

china-suicid-attemptசீனாவில் ஏழு பேர்கள் கொண்ட ஒரு குடும்பம் தங்கள் வீடு பறிபோன அதிர்ச்சியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவகாரம் அந்த நாட்டையே உலுக்கியுள்ளது.

சீனாவில் eastern province of Jiangsu என்ற பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தினரின் வீட்டை உள்ளூர் பிரமுகர் ஒருவர் கைப்பற்றிவிட்டதாகவும், அதற்கு எவ்வித நஷ்ட ஈடு தொகையும் கொடுக்காததால் ஒரே நாளில் நடுத்தெருவில் வந்த அதிர்ச்சியில் அந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர் சீனாவின் பிரபல தினசரி நாளிதழ் China Youth என்ற பத்திரிகை அலுவலகம் முன் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர்.

விஷம் குடித்த ஏழு பேர்களையும் பரிசோதனை செய்த சீன மருத்துவர்கள் நான்கு பேர்களின் உடல்நிலை திருப்திகரமாக உள்ளதாகவும், ஆனால் மூன்று பேர்களின் நிலை மிகவும் அபாயகரமாக உள்ளதாகவும் கூறியுள்ளனர்.; இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக Jiangsu பகுதி போலீஸார் கூறியுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் ஒரே நேரத்தில் தற்கொலை செய்துகொள்ள எடுத்த முயற்சியால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: , ,

Leave a Reply