ஆறு வருடங்களுக்கு முந்தைய காதலியிடம் ஆர்யா மீண்டும் நெருக்கம். கோலிவுட்டில் பெரும் பரபரப்பு.

aarya-poojaஅனுஷ்கா, நயன்தாரா ஆகியோர்களுடன் நெருக்கமாக இருப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நடிகர் ஆர்யா மீண்டும் நடிகை பூஜாவுடன் நெருக்கமாக இருப்பதாக கோலிவுட்டில் செய்தி பரவி வருகிறது.

சமீபத்தில் ஆர்யா தயாரித்த ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஆர்யா கோலிவுட் கதாநாயகிகளுக்கு பிடித்த நடிகராக இருப்பதாக த்ரிஷா, நயன் தாரா உள்பட அனைத்து நடிகைகளும் வெளிப்படையாக பேசினார்கள். இந்நிலையில் தனது முன்னாள் காதலியான நடிகை பூஜாவுடன் மீண்டும் உறவை புதுப்பித்துள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

நடிகை பூஜாவுடன் ஆர்யா, ‘ஓரம்போ’ ,உள்ளம் கேட்குமே, நான் கடவுள் போன்ற படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு நான் கடவுள் படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் இடையே நெருக்கம் உண்டானதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் அப்போது செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் இருவரும் மீண்டும் சந்திக்க நேர்ந்ததாகவும், அப்போது இருவரும் தங்கள் பழைய நெருக்கத்தை மீண்டும் புதுபித்துக் கொண்டாதாகவும் கூறப்படுகிறது.

விழா முடிவடைந்ததும் அங்கிருந்த கேரவனில் இருவரும் தனியாக நீண்ட நேரம் உட்கார்ந்து பேசி உள்ளனர். இந்த ரகசிய சந்திப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் மிகவேகமாக பரவி வருகிறது. ஆனால் இந்த கிசுகிசு குறித்து இருவருமே மறுத்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply