பிரித்தானியாவின் மேற்கு பிராங்போர்ட் பகுதியில் வசித்துவரும் 27 வயதான கர்ப்பிணிப்பெண் ஒருவர் தனது மடத்தனமான செயற்பாட்டினால் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அதாவது சில மணி நேரத்திற்கு முன்னர் கடையொன்றில் தான் திருடிய உடையை அணிந்து எடுத்த புகைப்படத்தினை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.
ஆடை திருடப்பட்டதை அறிந்த கடை முதலாளி சமூக வலைத்தளங்களை உதவியாகக் கொண்டு திருடரை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
அத்துடன் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளையும் பயன்படுத்தி குறித்த பெண்ணை பொலிசாரிடம் அடையாளம் காட்டியுள்ளார். இந்த ஆதாரங்களைக் கொண்டு பொலிசார் அப்பெண்ணை கைது செய்துள்ளனர்.
















