“சிங்கள இனவெறியர்களின் ஆதரவாளர்களின் பணத்தில், தயாராகும் கத்தி திரைப்படத்தை வெளியிடக் கூடாது” என்று மாணவர்களின் அமைப்பான முற்போக்கு மாணவர் முன்னணி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
மாணவர் முன்னணியின் பிரதிநிதிகள் இது தொடர்பாக, திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தினரையும், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினரையும் சந்தித்து அறிவுறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
முற்போக்கு மாணவர் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் மாறன் சுசீந்திரம் அடங்காத் தமிழன் இது பற்றி தமது முகநூல் பக்கத்தில்…. “தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினரை சந்தித்து, சிங்கள இனவெறியர்களின் பணத்தில் தயாராகி இருக்கும் கத்தி திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று அறிவுறுத்த உள்ளோம். முடிந்தவர்கள் கலந்து கொள்ளுங்கள்” என்று கூறியிருக்கிறார். இதன் தொடர்ச்சியாய் கத்தி படத்துக்கு எதிராக அனைத்து கல்லூரி மாணவர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தவும் மாணவர்கள் அமைப்புகள் திட்டமிட்டு வருகின்றன.
















