இலங்கையின் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாற்றம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அந்தவகையில் வடமாகாண முதல்வர் சீ.வி.விக்கினேஸ்வரனை நியமிக்க திட்டமிடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இரா.சம்பந்தன் இனிவருங்காலங்களினில் தான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லையென தெரிவித்துள்ளதோடு தானே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசிய தலைவராக செயற்படப்போவதாக அறிவித்துள்ளார்.
தற்போது தமிழரசு கட்சியின் தலைவராகவும் இருந்து கொண்டு கூட்டமைப்பின் தலைவராகவும் இருப்பதனால் ஏனைய பங்காளிக்கட்சிகளது விடயத்தினை கட்டுப்படுத்த முடியாதிருப்பதால் தமிழரசுக்கட்சி பதவியினை வடமாகாண முதல்வர் சீ.வி.விக்கினேஸ்வரனிற்கு வழங்க இரா.சம்பந்தன் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
















