இராணுவத்தில் அழகியல் நிபுணர்களுக்கான வெற்றிடத்துக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் உரையாற்றிய அவர் அழகியல் நிபுணர்களுக்கு இராணுவத்தில் நல்ல பல சந்தர்ப்பங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சங்கீதம், நடனங்களில் ஈடுபாடுடையவர்கள் இணைந்து கொள்ளமுடியும். நல்ல திறன்களையுடையவர்களுக்கு இது நல்லதொரு வாய்ப்பாக அமையும் எனவும் ஆர்வமுள்ளவர்களும் விருப்பமுள்ளவர்களும் விண்ணப்பிக்க முடியும் என்றார். விண்ணப்பமுடிவு திகதி எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது
















