நரேந்திரமோடி விசா விவகாரம் முடிந்து போன ஒன்று – அமெரிக்க உயர் அதிகாரி நிஷா தேசாய் பிஸ்வால்

Narendra-Modi-visa-issueவாஷிங்டன், அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய பிரதமர் நரேந்திர மோட்டியை அமெரிக்கா வருமாறு அழைத்து உள்ளார். அதனால் விசா விவாகாரம் முடிந்துபோன ஒன்றாகும் என அமெரிக்க உயரதிகாரி நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்து உள்ளார்.

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான வெளிவிவகார உதவி செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் கூறியதாவது:-

அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒபாமா நிர்வாகம் மோடியை அமெரிக்கா அழைத்து உள்ளதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளது.
அமெரிக்காவிற்கு வருமாறு ஒபாமா பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தது மூலம் அவருக்கு விசா வழங்கப்படும் என்றும் அது அவர்களால் செய்யமுடியும் என்றும் நாங்கள் எதிர் நோக்குகிறோம்.

தனிப்பட்ட விசா என்பது தனிப்பட்ட ஓருவரின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என நான் நினைக்கிறேன்.பிரதமர் என்பவர் தனிப்பட்டவர் அல்ல. ஆனால் நாங்கள் இதை முன்னெடுத்து செல்ல நினைக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags: , ,

Leave a Reply