இலங்கை விவகாரங்களில் நோர்வேயின் கரிசனை குறைவடைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதான ஏற்பட்டாளராக கடந்த காலங்களில் நோர்வே கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும், தற்போது இலங்கை விவகாரங்களில் நோர்வேயின் கரிசனை வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்து அரசாங்க அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்பும் முனைப்புக்களில் தற்போது நோர்வே கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்வதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாறாக அண்டை நாடான உக்ரேய்ன் விவகாரத்தில் நோர்வே அதிக கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், தொடர்ச்சியாக இலங்கையின் நிலைமைகள் குறித்து கண்காணிக்கப்பட்டு வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
















