இலங்கையில் நடைபெறவுள்ள பாதுகாப்பு மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி முதல் 20ம் திகதி வரையில் இந்த பாதுகாப்பு மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது.இலங்கை விவகாரங்களில் காங்கிரஸ் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும், பாரதீய ஜனதா கட்சியின் கொள்கைகளுக்கும் இடையில்N வறுபாடு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் நடைபெறவுள்ள பாதுகாப்பு மாநாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான சுப்ரமணியம் சுவாமி உள்ளிட்ட பிரதிநிதிகளும், உயர் இராணுவ அதிகாரிகளும் பங்கேற்க உள்ளதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது என அவா குறிப்பிட்டுள்ளார். தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறைகளுக்காக அமெரிக்கா குரல் கொடுத்து வருகின்ற போதிலும் இந்தியா அமைதி பேணி வருகின்றமை வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
















