அபகமுவ பிரதேசசபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர், பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு முன்னாலுள்ள பஸ்தரிப்பிடக் கூரையில் ஏறி எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.
பிரதேசத்தில் இடம்பெறும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்த பிரதேச சபை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்களின் தேவைக்கேற்ற முறையிலேயே நடைபெறுவதாக கூறியே இவர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தாம் மகிந்த அரசின் உறுப்பினராக இருப்பதில் வெட்கமடைவதாக இடம்பெற்ற மாதாந்த கூட்டத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
















