ஐ.நா நீதி விசாரணை நடத்த தடை செய்கின்றவர்களும் குற்றவாளிகள் – வைகோ!

vaiko5இனப்படுகொலை செய்தவனும் குற்றவாளி, உதவுகிறவனும் குற்றவாளி, நீதிவிசாரணை நடத்த தடைசெய்கிறவனும் குற்றவாளி என்று சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வில் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழின படுகொலையினை விசாரணை செய்யும் ஐ.நா நீதி விசாரணை குழுவின் விசாரணைக்கு தடைசெய்கின்றவர்களும் குற்றவாளிகள் என்று நேற்று சென்னையில் நடைபெற்ற மாளவி சிவகணேசன் எழுதிய ‘என் தாய்நாட்டில் நான் முகவரி அற்றவாள”என்ற புத்தகத்தினை வெளியிட்டு வைத்து சிறப்புரை ஆற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த தமிழினத்திற்கு நம்மாலான சிறிய உதவியினை செய்யமுடியுமோ அதனை செய்கிறோம் நானும் என் சகாக்களும் ஒரு மாத காலமாக ஈழத்தின் இனக்கொலை இதயத்தில் இரத்தம் என்ற குறுந்தட்டை தமிழிலும் ஆங்கிலத்திலும் தயாரித்து அனைத்து நாடுகளுக்கும் அனுப்பிவைத்தோம்.

இவ்வளவு கொடுமைகள் நடந்திருக்கின்றன இதற்கு பின்னர் சுதந்திரமான நீதிவிசாரணை நடத்துவதற்கு வருகின்றவர்களுக்கு இந்தியாவில் அனுமதி கிடையாதா? மனிதஉரிமைகள் உண்ணா இந்தியாவில் அப்படியானால்,நீதியுண்டா? இசைப்பிரியா நாசமாக்கப்பட்டாளே..கொடுமையான முறையில் அழிக்கப்படாளே அவள் மகள் அகல்யா அகலை இழந்தாளே. அதை பார்க்கமுடியுமா அந்த காட்சியை பத்து பதினைந்திற்கு மேற்பட்ட சிங்கள வெளிநாய்கள் நச்சைஉமிழும் காத்துப்பாட்டாலே நச்சு பரவும்,தங்களும் அழியும் பிறரையும் அழிக்கும்,அப்படிப்பட்ட வெறிநாய்கள் நான் இப்படித்தான் நாசம் செய்தேன் என்று அவர்கள் சிங்களமொழியில் பேசுவதை நாங்கள் பதிப்பிக்க முடியாது என்று அந்த சனல் 4இல் சொல்கின்றார்கள் இதை இங்கு பதிப்பிக்க முடியாது என்று.

அந்த கொடுமைக்கு நீதிகிடையாதா? எட்டு தமிழர்கள் அம்மணமாக இழுத்துவரப்பட்டு ஒவ்வொருவராக சுட்டுக்கொல்லப்பட்டார்களே என்ன அத்தாட்சி வேண்டும் என்ன ஆவணம் வேண்டும் இதற்கு பிறகும் நீதிக்கு தடைஎன்று சொன்னால்,இனப்படுகொலை செய்தவனும் குற்றவாளி, உதவுகிறவனும் குற்றவாளி, நீதிவிசாரணை நடத்த தடைசெய்கிறவனும் குற்றவாளி இந்த கொடூரமான படுகொலை குறித்த நீதிவிசாரணைக்கு எவன் தடைசெய்தாலும் அந்த நீதிவிசாரணைக்கு இடமில்லை என்று சொன்னாலும் அவர்களும் இந்த குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.

இந்த கொடுமைகள் எல்லாம் நடந்திருக்ககூடிய சூழலில் நேற்று நடந்த சம்பவம் பற்றி சொன்னார்கள் மன்னிப்பு கேட்பதோடு முடிந்து விட்டதா என்அறிக்கையில் எச்சரிக்கையாக மன்னிக்க முடியாது என்று பயன்படுத்தினேன்.
நாங்கள் ஏழரைகோடி போர் இருக்கின்றோம் இந்த மாநிலத்தின் முதலமைச்சரையும் இந்திய நாட்டின் தலைமை அமைச்சரையும் சிங்கள படைஅமைச்சாகம் இழிவுபடுத்தி சித்தரிக்கின்றது என்றால் காட்டுக்கூச்சல் போடவேண்டாம் ஒப்பாரிவைக்கவேண்டாம்,மீனவர்களுக்காக பேசவேண்டாம் ஒப்பாரிஎல்லாம் எடுபடாது இரு சுதந்திரமான அரசுகளுக்கு மத்தியில் என்றோ முடிந்துபோன விடயம்,அதனை பற்றி பேசாதே என்று அறிவித்துள்ளது சிறீலங்கா அரசாங்கத்தின் மனநிலையினை காட்டிநிக்கின்றது. என்றும் தெரிவித்த வைகோ..

அவர்கள் இதற்கு என்ன செய்யபோகின்றீர்கள் இந்த மன்னிப்பு எதற்காக கேட்டார்கள் அந்த அமைச்சகம் ஏன் தெரிவித்தது. அவர்கள் ஏற்பாடு செய்கின்ற சூழ்ச்சி ஈழத்தமிழினத்தையே கருவறுக்க துணிந்து இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்றுகுவித்த கொடியவர்கள் கூண்டிலே நிறுத்தப்படாமல் ஈழத்தமிழர்களுக்கு நீதிகிடைக்காமல் மேலும் கொடுமைசெய்வதற்கு ஏற்றவிதத்தில் இந்திய அரசு தங்களுக்கு பக்கபலமாக நிக்கும் என்றஒரு நிலையினை உருவாக்கி கொண்டிருக்கின்ற நேரத்தில் அதற்கு இடையூறாக இந்த பிரச்சனைமூலமாக தமிழகத்தில் ஒரு கொந்தளிப்பு ஏற்படக்கூடாது நாம் போட்ட திட்டத்தை நிறைவேற்றி கொள்வதற்கு நாம் இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக சிறீலங்கா அமைச்சகம் மன்னிப்பு கேட்டது.

எங்கள் மக்கள் கொல்லப்பட்டதற்க என்னமன்னிப்புண்டா இதுதான் இன்று எழுப்பப்படுகின்ற கேள்வி இலங்கைளில் படைகருத்தரங்கு நடத்தபோகிறார்கள் அதுஎதற்கு தமிழிர்களை கொல்வதற்க எதற்கு படை கருத்தரங்கு இதற்கு இந்திய படையினரும் அதிகாரிகளும் செல்லவுள்ளார்களாம்,இது எதற்கு தமிழர்களை கொண்டு குவித்ததற்கு மகுடம் சூட்டவா கைகுலுக்கவா,அப்படியானால் நான்கேட்கிறேன் இந்தியஅரசே கடுகளவும் மனிதாபிமானம் உனக்கு இருக்குமானால் இலங்கையில் தமிழ்இனத்தை கருவறுத்து இலட்சக்கணக்கான தமிழர்களை கொண்டவன் நடத்துகின்ற இலங்கை படைகருத்தரங்கிற்கு இந்தியாவில் இருந்து எவரும் போககூடாது முடிவெடுங்கள் கேள்விகேட்பார்களே என்று நினைக்கவேண்டாம். எங்களை போல உணர்வுகொண்டவர்கள் தலைவர் பிரபாகரன் அவர்கள் உருவாக்கிய படைஅணியில் இருந்து போராடிய போராளிகளைபோன்றவர்கள் வருங்காலத்திலே வருவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் இன்னும் உயிருடன்தான் இருக்கிறேன் நட்வர் சிங்….வைகோ

மேலும் அவர் தெரிவிக்கையில் வெளிவிவகார துறையின் உடைய ராஜாங்க மத்திரியாக இருந்த நட்வர் சிங் என்பவர் றாஜீவ்காந்தி பிரபாகரணை நம்பினார் பிரபாகரன் றாஜீவ்காந்தியை ஏமாற்றினார் என்று அவர் சொல்லியுள்ளார்…நான் இன்னும் உயிருடன்தான் இருக்கிறேன் நட்வர் சிங்..றாஜீவ்காந்தியின் நரித்தன புத்திகளையும் தலைவர் அவர்களை இந்தியாவிற்கு அழைத்து இந்திய சிறீலங்கா ஒப்பந்தத்தை திணித்ததும் போன்ற இந்திய அரசின் உண்மை சம்பவங்களையும் வைகோ அவர்கள் எடுத்துரைத்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply