தமிழ் மக்களின் இனப்பிரச் சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும். தீர்வுக்குக் காலம் கடத்தினால் பிரச்சினை பூதாகரமாகும். மீண்டும் ஒரு போராட்டம் தோன்றக்கூடும். அது மிகவும் அபாயகரமானது.
எம்மால் அதிலிருந்து மீள முடியாது என கோட்டை நாகவிகாராதிபதியும், சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான வண. மாதுலுவாவே சோபித தேரர் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இனவாத, மதவாத போராட்டம் ஆரம்பித்தால் அது நாட்டுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். கடந்த 30 வருட கால அனுபவம் எமக்கு இருக்கின்றது. மீண்டும் அவ்வாறான தொரு நிலை ஏற்படாதிருக்க வேண்டுமாயின் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே நம்பிக்கையைக் கட்டியயழுப்ப வேண்டும்.
சட்டம் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் அவநம்பிக்கையை ஏற்படுத்தினால் இந்தப் பயணத்தைத் தொடரமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என எமது அரசமைப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கமைய எமது பிரச்சினைகளை நாம் தீர்த்துக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் அதில் சர்வதேசதின் தலையீடுகள் இடம்பெறும். அது மிகவும் அபாயகரமானது என்றும் சுட்டிக்காட்டினார். இனப்பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வைக் காணப்து என்பது குறித்து நாம் இதுவரையில் எந்தத் தீர்மானமும், யோசனையும் முன்வைக்கவில்லை. ஏனெனில் நாம் அதைத் தனியாக செய்ய முடியாது. இனப்பிரச்சினை என்பது பாரிய ஒரு பிரச்சினையாகும்.
நாம்அனைவரும் ஒன்றிணைந்து பேச்சு நடத்திதான் அதற்கான தீர்வைக் காணவேண்டும் என்றும் தெரிவித்தார்.
















