எதிர்க்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காப பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பேரவை தலைவர் கரு ஜயசூரிய ஆகியோர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஆர்வம் காட்டி வருவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த மூவருமே, மோடியை சந்திப்பதற்கு விரும்புவதாக இந்திய அரசாங்கத்திடம் அறிவித்துள்ளனர்.
சந்திப்பு நடாத்த நேரமொன்றை ஒதுக்கித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கு இந்த மூன்று பேரும் முயற்சித்து வருவதாகவும், அதன் ஓர் கட்டமாக இந்தியப் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்த உத்தேசித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உத்தேசித்துள்ள ரணில், கரு, சந்திரிக்கா ஆகிய மூவரும் மோடியை சந்தித்து அவரது ஆதரவினை பெற்றுக்கொள்ள முற்சித்து வருகின்றனர் என குறிப்பிடப்படுகிறது.
எனினும், இதுவரையில் இந்த மூவரின் இந்திய விஜயத்திற்கான திகதிகள் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதேவேளை, பல்வேறு காரணிகளையும் ஆராய்ந்ததன் பின்னரே எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பதனை இந்தியா அறிவிக்கும் என அரசியல் வட்டாரத் தகல்கள் தெரிவிக்கின்றன.
















