அனைத்துலகச் சட்டங்களை சிறிலங்கா மீறுவதாக, அகதிகளுக்கான ஐ.நா உயர்ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.
நியாயமான விசாரணைகளின்றி பாகிஸ்தானிய அகதிகளை சிறிலங்கா திருப்பி அனுப்புவதாக அகதிகளுக்கான ஐ.நா உயர்ஆணையப் பேச்சாளர் அட்றியன் எட்வேர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
அடிப்படையில், பலவந்தமாகத் திருப்பி அனுப்புவதில்லை என்ற கோட்பாட்டை இது மீறுகிறது. இது அனைத்துலகச் சட்டங்களைத் தெளிவாக மீறுகின்ற செயலாகும்.
அகதிகள் தொடர்ந்து திருப்பி அனுப்பப்படுவது குறித்து கவலை கொண்டுள்ளோம். அவர்கள் நாடுகடத்தப்படுவதை தடுக்க வேண்டும். 11 பெண்களும், 8 குழந்தைகளும் கூட திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். சில குடும்பங்கள் தனியாகப் பிரித்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிகிறோம். கடந்த முதலாம் நாளுக்குப் பின்னர், 88 பாகிஸ்தானிய அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
















