யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வளாகத்திற்குள் இரண்டாவது தடவையாகவும் சட்டம் வளைந்து கொடுத்துள்ளது.
”ஆலய வழிபாட்டுக்கு வருபவர்களுக்கான பொதுநடைமுறை” என ஆலய நிர்வாகமும், மாநகரசபையும் இணைந்து கடைப்பிடித்து வரும் நடைமுறை இரண்டாவது தடவையாகவும் நேற்று மீறப்பட்டமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலய வளாகத்திற்குள் ஏற்கனவே மேர்வின் சில்வா வாகனத்தில் பிரவேசித்ததைப்போல, நேற்று வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் வாகனத்தில் பிரவேசித்தார்.
நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள சக்தி எப்.எம்மின் கலையகத்தை திறந்து வைக்க வந்த விக்னேஸ்வரன், ஆலயத்திருவிழாவிற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்புத்தடை பகுதியில் வாகனத்தை நிறுத்தாமல் உள்ளே பிரவேசித்தார். துவிச்சக்கர வண்டிகள் கூட உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில், வாகனமொன்று உள்ளே வருவதை மக்கள் அதிசயமாக பார்த்துக்கொண்டு நின்றனர்.
இதேபோல, அண்மையில் மேர்வின் சில்வாவும் ஆலயத்திற்குள் இப்படி அதிரடியாக வாகனத்துடன் நுழைந்திருந்தார். ஆலய சூழல் மாசுபட்டுவிட்டதாக அப்பொழுது அறச்சீற்றம் கொண்ட தமிழ் ஊடகங்கள் எல்லாம், இந்த விடயத்தில் மௌனம் காத்துக்கொண்டிருப்பது ஏன்?
















