போர் குற்றம் தொடர்பாக நடைபெறும் ஐக்கிய நாடுகளின் விசாரணைகளுக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறுகையில், இலங்கையில் நடத்தப்படும் போர்க்குற்ற விசாரணைகளின் மூலம் அங்கு நல்லிணக்கத்துக்கு வழியேற்படுத்தும் என்றும். எனவே அதற்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை அரசும், மக்களும் ஐக்கிய நாடுகளின் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பை வழங்கி மனித உரிமைகளை பாதுகாப்பதுடன் இறுதி சமாதானத்துக்கும் வழியேற்படுத்த வேண்டும் என்றும் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளால் அமைக்கப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணைக்குழுவின் விசாரணைகளை பான் கீ மூன் ஊக்கப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
















