எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலி;ல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முதலாம் கட்ட தேர்தல் முடிவுகளின் பேர்து 51 வீத வாக்குகளைப் பெற்றுக் கொள்வது சவாலாகவே இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கான மக்கள் ஆதரவு வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகள் மற்றும் ஏனைய காரணிகளினால் நாட்டு மக்கள் ஜனாதிபதி மீது கொண்டிருந்த அபிமானத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் விருப்பு வாக்குகள் இரண்டாம் கட்டமாக கணக்கெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது ஜனாதிபதி அல்லாத வேறும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் வாக்காளர்கள் ஜனாதிபதியை தங்கள் இராண்டாம் மூன்றாம் தெரிவாக, தெரிவு செய்ய மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஒருவருக்கு தேர்தலில் வெற்றியீட்டக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
விருப்பு வாக்குகளை கணக்கெடுக்காது தொடர்ந்தும் பதவியில் நீடிக்க ஜனாதிபதி முயற்சிக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
















