ராஜபக்ச அரசாங்கத்தின் நிலைப்பாடு சிங்களவாக்காளாகள் மத்தியில் ஆதரவை அதிகரிப்தை நோக்கமாக கொண்டது – ஜோன் சிவ்டன்

John_HRWயுத்தக் குற்ற விசாரணையர்களுக்கு அனுமதி வழங்குவதில்லை என்ற ராஜபக்ச அரசாங்கத்தின் நிலைப்பாடு அதன் சிங்களவாக்காளாகள் மத்தியில் ஆதரவை அதிகரிப்தை நோக்கமாக கொண்டது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஜோன் சிவ்டன் தெரிவித்துள்ளார்.

யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை செய்வது மற்றும் பொறுப்புக் கூறுவது தொடர்பாக அரசாங்கம் உண்மையில் எந்தவித அக்கறையையும் வெளிப்படுத்தவில்லை, இதன் காரணமாக ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு ஆச்சரியமளிக்கவில்லை.

அவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றும் சூழலில் செயற்படுகின்றனர். அவர்கள் அந்த நிலையில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்பதை நம்பவில்லை. தாங்கள் செய்தது அனைத்தும் மன்னிக்க கூடியது, நியாயப்படுத்தக் கூடியது என அவர்கள் கருதுகின்றனர். எதுவும் நடக்கவில்லை என்றும் நினைக்கின்றனர்.

ராஜபக்ச அரசாங்கத்தின் நிலைப்பாடு அதன் சிங்களவாக்காளாகள் மத்தியில் ஆதரவை அதிகரிப்தை நோக்கமாக கொண்டது.

உங்களது நாட்டின் இறைமை சர்வதேச சதியால் பாதிக்கப்படக்கூடிய ஆபத்துள்ளது என தெரிவிப்பதன் மூலமாக ஏனைய நாடுகள் குறித்து அச்சத்தை ஏற்படுத்தி உள்ளுர் செல்வாக்கை அதிகரிக்கும் முயற்சியிதுவென அவர் தெரிவித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply