கூடமைப்பு – மோடியிடையே நாளை முக்கிய சந்திப்பு

tnalogo2தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வட மாகாணச்சபை பிரதிநிதிகள் நாளை புதுடில்லியில் இந்திய பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்கவுள்ளனர்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் தலைமையிலான 5 பேர் அடங்கிய குழு நேற்று புதுடில்லி சென்றடைந்துள்ளது.

இந்தியாவின் 15 ஆவது பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடியை முதற்தடவையாக சந்திக்கவுள்ள இக்குழு பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளது.

இதில் குறிப்பாக வடமாகாணச்சபை அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இக்குழு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் ஆகியோரையும் சந்திக்கவுள்ளனர்.

இக்குழு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதாவையும் சந்தித்த வடமாகாணச்சபை அதிகாரம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Tags: , ,

Leave a Reply