போக்கிரி – ஆழ்வார், துப்பாக்கி – மாற்றான் போன்ற நிலைமை கத்தி-அஞ்சான் படங்களுக்கு வருமா?

Kaththi-posterவிஜய்யுடன் நடிக்கும் ஒரு நடிகை அதே நேரத்தில் மற்றொரு நடிகருடன் நடித்தால் அந்த படம் படுதோல்வி அடையும் என்றும் சில புள்ளி விபரங்களை ஃபேஸ்புக் பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2007ஆம் ஆண்டு விஜய் மற்றும் அஜீத்துடன் பிரபல நடிகை அசின் இரண்டு படங்கள் நடித்தார். அஜீத்துடன் ஆழ்வார் மற்றும் விஜய்யுடன் போக்கிரி. விஜய்யுடன் அசின் நடித்த போக்கிரி மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் அஜீத்துடன் அசின் நடித்த ஆழ்வார் படுதோல்வி அடைந்தது.

அதே போல் கடந்த 2012ஆம் ஆண்டு நடிகை காஜல் அகர்வால் விஜய்யுடன் துப்பாக்கி படத்திலும், சூர்யாவுடன் மாற்றான் படத்திலும் ஒரே நேரத்தில் நடித்தார். துப்பாக்கி மிகப்பெரிய வெற்றியையும், மாற்றான் படுதோல்வியையும் அடைந்தது.

தற்போது சமந்தா விஜய்யுடன் கத்தி படத்திலும், சூர்யாவுடன் அஞ்சான் படத்திலும் நடித்தார். அஞ்சான் படுமோசமாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்தகால செண்டிமெண்டுக்களை வைத்து பார்த்தால் கத்தி மிகப்பெரிய வெற்றியயை பெறும் என விஜய் ரசிகர்கள் ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் ரசிகர்கள் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ள செண்டிமெண்ட்டுக்கள் பலிக்குமா? என்பதை கத்தி திரைப்படம் ரிலீஸுக்கு பின்னர்தான் தெரிய வரும்.

Tags: , ,

Leave a Reply