பத்து ஆண்டுகளில் இடம்பெறப்போகும் தமிழினத்தின் அழிவை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும்

suresh-premachandran1பத்து ஆண்டுகளில் இடம்பெறப்போகும் தமிழினத்தின் அழிவை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமரிடம் கோரியதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழினத்தின் அழிவை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும். பத்து வருடங்களில் தமிழினத்தின் அழிவு எவ்வளவு தூரத்திற்குப் போகும் என்பதை இப்போதே உணரமுடிகின்றது.

இதனைத் தடுத்து நிறுத்தவேண்டுமானால் இந்திய அரசு மிகவும் வேகமாகச் செயற்பட வேண்டும். இந்த விடயத்தை இந்தியப் பிரதமரிடம் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். அவர் இதனைத் தான் புரிந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதுமாத்திரமின்றி, தாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும், தமிழ் மக்களுடனும் ஒன்றிணைந்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

Tags: ,

Leave a Reply