விக்ரமை வைத்து ஷங்கர் இயக்கும் ஐ படம் தொடங்கப்பட்டதிலிருந்தே ரசிகர்களை குடைந்து கொண்டிருக்கும் கேள்வி…
ஐ என்றால் என்ன?
ஷங்கரும் சாமர்த்தியமாக இதற்கான காரணத்தை சொல்லாமல் ரகசியம் காத்து வந்தார்.
ஆமாம்.. ஐ என்றால் என்ன?
சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தமிழ்ப் பேரகராதியில் இதற்கான விளக்கத்தைத் தேடியபோது…
வியப்பு, அழகு, மென்மை, நுன்மை, கோழை, தலைவன், கணவன், அரசன், ஆசான், தயாரிக்கப்பட்ட நச்சு பாஷாணம் – ஆகிய அர்த்தங்கள் சொல்லப்பட்டிருந்தன.
இவற்றில் எந்த அர்த்தத்தை குறிக்கும்வகையில் ஐ என்று தலைப்பு வைத்திருக்கிறார் ஷங்கர்?
ஐ படத்தின் கதைப்படி கதாநாயகனான விக்ரம், வில்லனால் படு மோசமாக பழி தீர்க்கப்படுகிறான்.
எப்படி?
விக்ரம் உடம்பில் மிக கொடிய வைரஸை ஊசி மூலம் செலுத்திவிடுகிறான் வில்லன்.
விக்ரம் உடம்பினுள் செலத்தப்பட்ட அந்த வைரஸ் காரணமாக விக்ரம் உடம்பு உருக்குலைந்துபோகிறது.
அது மட்டுமல்ல, உடம்பு முழுக்க ரோமங்கள் முளைத்து ஒரு மிருகமாய் உருமாறிவிடுகிறார் விக்ரம்.
இந்த தோற்றத்திலிருந்தும், வைரஸ் தாக்குதலில் இருந்தும் விக்ரம் எப்படி மீண்டு வருகிறார்? என்பதுதான் ஐ படத்தின் மிச்ச கதை.
எனவே…
தயாரிக்கப்பட்ட நச்சு பாஷாணம் என்ற அர்த்தத்திலேயே தன் படத்துக்கு ஐ என ஷங்கர் தலைப்பு வைத்திருக்கிறார் என்று தோன்றுகிறது.
படம் வரட்டும்! நம் யூகம் சரியான்னு பார்ப்போம்…!
















