மனிதஉரிமை என்பது எல்லைகளுக்கு அப்பாற்பட்ட சர்வதேச விடயம் என்பதை தலைமைத்துவம் மூலம் நிரூபித்தவர் நவி

navanethem-pillay9மனிதஉரிமை என்பது எல்லைகளுக்கு அப்பாற்பட்ட சர்வதேச விடயம் என்பதை தலைமைத்துவம் மூலம் நிரூபித்தவர் நவி – இலங்கையின் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் புதிய ஆணையாளர், பதவிவிலகும் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை பின்பற்றி செயற்படுவார் என எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ள இலங்கையின் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு ஆனால் துரதிஸ்டவசமாக அரசாங்கம் புதிய மனித உரிமை ஆணையாளர் மனித உரிமை விழுமியங்களுக்கு மாறாக செயற்படுவார் என எதிர்பார்க்கிறது என சுட்டிக்காட்டியுள்ளது.

புதவி விலகும் ஆணையாளரை பாராட்டி விடுத்துள்ள அறிக்கையில் இலங்கையில் எதேச்சாதிகாரப் போக்கு தென்படுவதையும் பயங்கரவாதம் ஏற்படுத்தி உள்ள தாக்கங்களையும் மிகச் சரியாக இனம் கண்டவர் நவநீதம் பிள்ளை என தெரிவித்துள்ளது.

சட்டத்தரணி வெலியமுன உட்பட்ட குழுவினர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

சர்வதேச மனித உரிமை விழுமியங்களை பாதுகாப்பதிலும் ஊக்குவிப்பதிலும் முன்ணணியில் நின்று செயற்பட்டவர் நவநீதம் பிள்ளை. அவர் தனது பணியை எவ்வித அச்சமும் இன்றி நிறைவேற்றினார். மனித உரிமை ஆணையாளரால் சர்வதேச அமைதியை எப்படி ஏற்படுத்த முடியும் என நிரூபித்துக் காண்பித்தார். மனித உரிமை என்பது எல்லைகளுக்கு அப்பாற்பட்ட சர்வதேச விடயம் என்பதை தனது தலைமைத்துவம் மூலம் அவர் உலகத் தலைவர்களுக்கு புரிய வைத்தார்.

இலங்கைக்கான அவரது விஜயத்தை நாங்கள் நன்றியுடன் நினைவு கூருகிறோம். அவரது இறுதி உரை உலகம் முழுவதிலும் உள்ள மனித உரிமை சமூகத்தின் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இலங்கைக்கான விஜயத்தின் போது அவர் பல நெருக்கடிகளை எதிர் கொண்டார். அவரது நியாயபூர்வமான செயற்பாடுகளை பக்கச் சார்பானவை என இலங்கை அரசு பிழையாக குற்றம் சாட்டியது. இலங்கையில் எதேச்சதிகாரப் போக்கு தென்படுவதையும் பயங்கரவாதம் ஏற்படுத்தி உள்ள தாக்கங்களையும் மிகச் சரியாக இனம் கண்டவர் நவநீதம் பிள்ளை.

அவருடைய பணிக்காக தலைவணங்கும் அதே வேளை அடுத்த மனித உரிமை ஆணையாளரும் அவரைப் பின்பற்றி நடப்பார் என எதிர் பார்க்கிறோம். ஆனால் துரதிஷ்டவசமாக அரசாங்கம் புதிய மனித உரிமை ஆணையாளர் மனித உரிமை விழுமியங்களுக்கு மாறாக செயற்படுவார் என எதிர்பார்க்கிறது. சர்வதேச முடிவுகளும் சர்வதேச விழுமியங்களும் தனிநபர் ஒருவரின் ஆழுமையில் தங்கி இருக்கவில்லை என்பதை அரசாங்கம் உணர்வதற்கான தருணம் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: ,

Leave a Reply