அயர்லாந்தின் புகைப்படக்காரர் ஒருவரின் கமெராவில் சிறுமியின் ஆவி இடம்பெற்றிருப்பது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அயர்லாந்தில் உள்ள லெவிஷேம் (Lewisham) பகுதியை சேர்ந்த தாமஸ் பெவிஸ் (Thomas Beavis age-21) என்ற புகைப்படக்காரர், தனது விடுமுறையை வித்தியாசமாக கழிக்க ஆசைப்பட்டுள்ளார்.
எனவே அவர் அந்நாட்டில் உள்ள லோடஸ் ஹால் (Lotus Hall) என்ற பேய் மாளிகைக்கு சுற்றுலா சென்றதுடன், அங்கு புகைப்படங்களை எடுத்துள்ளார்.
இதனையடுத்து வீடு திரும்பிய அவர் தான் எடுத்த புகைப்படங்களை நண்பர்களிடம் காட்டியபோது, மாளிகையின் சுவருக்கு அருகில், சிறுமி ஒருவரின் ஆவி இருந்ததைக் கண்டு அதிர்ந்துள்ளார்.
இதுகுறித்து மாளிகை நிர்வாகம் கூறியதாவது, அயர்லாந்தின் வெக்ஸ்போர்டு கவுண்டியின் (Werkspad Gount) ஹூக் (Hook) தீபகற்பத்தில் அமைந்துள்ள, லோடஸ் ஹால் (Lotus Hall) என்ற மாளிகையை, கடந்த 1350ம் ஆண்டில் ரெட்மாண்ட் குடும்பத்தினர் கட்டினர்.
நாளடைவில் இந்த மாளிகையில் இறந்தவர்கள் அதிகரித்ததால், ஆவிகள் சூழ்ந்த பேய் மாளிகை என இவ்விடம் அழைக்கப்பட்டது.
அதன்பின் பூட்டிக் கிடந்த அந்த மாளிகையை, டோட்டன்ஹெம் (Tottenham) பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், கடந்த 1766ம் ஆண்டில் வாங்கி குடியேறியிருந்தனர்.
ஆனால் அவர்களுக்கு அங்கிருந்த ஆவிகள் தொந்தரவளித்ததால், அந்த குடும்பத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் சில தினங்களிலேயே உடல்நலம் சரியில்லாமல் இறந்துள்ளார்.
இந்நிலையில் இன்றும் அங்கு ஆவிகள் நடமாட்டம் இருப்பதாக அந்நாட்டு மக்கள் பயத்துடன் இருக்கின்றனர் என்றும் புகைப்படத்தில் இருப்பது அந்த இறந்துபோன சிறுமியின் ஆவி தான் எனவும் தெரிவித்துள்ளனர்.
















