உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்ற அவதார் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் Sam Worthington ஆஸ்திரேலிய மாடல் அழகி ஒருவருடன் Maha’ulepu Beach என்ற இடத்தில் நிர்வாணமாக சூரிய குளியல் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆஸ்திரேலிய மாடல் அழகி Lara Bingle என்ற 27 வயது பெண்ணை காதலித்து வரும் நடிகர் Sam Worthington அவருடன் அடிக்கடி டேட்டிங் செல்வதுண்டு. இந்நிலையில் ஹவாய் தீவில் உள்ள Maha’ulepu Beach என்ற இடத்தில் இருவரும் நிர்வாணமாக சூரியக்குளியலில் ஈடுபட்டிருந்த போது அதை புகைப்படம் எடுத்த ஒருவர் அந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இன்று காலை முதல் ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க ஊடகங்களில் இந்த செய்திதான் தலைப்பு செய்திகளில் வெளிவந்துள்ளது. தற்போது Sam Worthington நடித்து வரும் ‘Deadline Gallipoli’, படப்பிடிப்பிற்காக Maha’ulepu Beach என்ற இடத்திற்கு சென்றிருந்தபோது அவருடன் அவருடைய கேர்ள் பிரண்ட் Lara Bingle அவர்களும் சென்றிருந்ததாகவும், படப்பிடிப்பு முடிந்த பின்னர் இருவரும் நிர்வாண நிலையில் சூரிய குளியலில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
















