நாடுகடத்தப்பட்ட இருவர் கைது – புலிகள் என்ற கோணத்தில் விசாரணை என்கிறது அரசாங்கம்

sebastianஅபுதாபியிலிருந்து நாடுகடத்தப்பட்ட இருவரை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (07.09.14) கைது செய்துள்ளனர்.

போலியான கடவுச்சீட்டுக்கள் ஊடாக பயணித்தமை மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீளவும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுத்தனரா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற் கொள்வதற்காக இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

20 வயதுடைய பாலச்சந்திரன் தவபாலன் அனுஷன், 43 வயதுடைய செபஸ்தியன் பிள்ளை ரொபட் ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் செபஸ்தியன் பிள்ளை ரொபட் என்பவர் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு 2010ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் திகதி பிணை நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டார் என பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

balachandran51. பெயர்: பாலச்சந்திரன் தவபாலன் அனுஷன்
2. வேறு பெயர்: இல்லை
3. முகவரி: இல.266, வல்லுவர்புரம், விஸ்வமடு, முல்லைத்தீவு
4. தற்காலிக முகவரி: இல்லை
5. தேசிய அடையாள அட்டை இல: 942802609 V
6. கடவுச்சீட்டு இலக்கம்: N 3598826
7. பிறந்த திகதி: 1994.10.06
8. வயது: 20

1. பெயர்: செபஸ்டியான் பிள்ளை ரொபட்
2. வேறு பெயர்: புலிகளின் பெயர்: டயஸ்
3. முகவரி: கட்கலந்தகுளம், முருங்கன், மன்னார்.
4. தற்காலிக முகவரி: இளவாலை, கிழக்கு, இளவாலை, யாழ்ப்பாணம்.
5. தேசிய அடையாள அட்டை இல: 721514253 V
6. கடவுச்சீட்டு இலக்கம்: N 5086823
7. பிறந்த திகதி: 1972.05.30
8. வயது: 43

Tags: ,

Leave a Reply