பிரிட்டனில் உள்ள ஒரு இளைஞர் தன்னுடைய உடல் எடை அதிகமாக இருக்கின்றது என்ற காரணத்தினால் மனம் வெறுத்து தற்கொலை முயற்சி செய்தார். ஆனால் அவர் தற்கொலைக்கு பயன்படுத்திய விஷம் அவருடைய உடல் எடையை குறைக்க உதவி செய்ததால், அந்த முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்டு தற்போது “ஸ்லிமி உடலமைப்பை பெற்றுள்ளார்.
பிரிட்டனின் East Yorkshire, என்ற பகுதியை சேர்ந்த Mike Waudby என்ற 22 வயது இளைஞரின் உடல் எடை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 209 கிலோ வரை இருந்தது. அவருடைய வேலையை கூட அவரால் செய்ய முடியாமல் இன்னொருவரின் உதவியை நாட வேண்டிய நிலை இருந்ததால் ஒரு கட்டத்தில் மனம் வெறுத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரது வீட்டில் உள்ளவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சையளித்து அவரை காப்பாற்றினர்.
சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்ததும் அவருடைய உடல் எடை நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை அவர் அறிந்தார். மீண்டும் மருத்துவ சோதனை செய்தபோது அவர் தற்கொலைக்காக சாப்பிட்ட விஷம், அவருடைய உடல் எடையை குறைக்க உதவி செய்து கொண்டிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் மனம் தளராமல் தினமும் 3 மணிநேரம் உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு ஆகியவற்றை கடைபிடித்து தற்போது114 கிலோ உடையவராக மாறிவிட்டார். அதுமட்டுமின்றி அவருக்கு தற்போது Mr Muscles”.என்ற பட்டமும் கிடைத்துள்ளது.
















