விஜய்யை அடுத்து மகேஷ்பாபுவை பிக்கப் செய்த செளந்தர்யா ரஜினிகாந்த்

soundharya-rajini-maheshbabuகோச்சடையான் திரைப்படத்தை இயக்கிய ரஜினியின் இளையமகள் செளந்தர்யா, சமீபத்தில் ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவராக பதவியேற்றுக்கொண்டார். அவர் பதவியேற்றவுடன் செய்த முதல் வேலை விஜய்யின் ‘கத்தி’ படத்தின் ஆடியோ உரிமையை பெற்றதுதான்.

கத்தி படத்தின் தயாரிப்பாளர் பிரச்சனையால் பிரபல நிறுவனமான சோனி நிறுவனமே கத்தியின் ஆடியோ உரிமையை வாங்க தயங்கிய நிலையில் தைரியமாக விஜய்யின் கத்தி ஆடியோ உரிமையை வாங்கும் முடிவை எடுத்தார். வரும் 19ஆம் தேதி கத்தி படத்தின் ஆடியோ வெளியாகிறது. இந்த விழாவில் எவ்வித பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டாரின் படத்தின் ஆடியோவை வெற்றிகரமாக கைப்பற்றிய செளந்தர்யா, அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் அகடு படத்தின் உரிமையை வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அதையும் வெற்றிகரமாக முடித்துவிட்டார். அகடு திரைப்படத்தின் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய நான்கு மாநில உரிமைகளையும் அவர் பெரும்தொகை கொடுத்து கைப்பற்றிவிட்டார். இந்த படம் வரும் 19ஆம் தேதி 4 மாநிலங்களிலும் சேர்த்து சுமார் 2000 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. சென்னையில் சுமார் 10 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகலாம் என கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டாரின் மகளாக பிறந்து சூப்பர் ஸ்டார்களின் படங்களை வியாபாரம் செய்வதில் வெற்றி கண்டு தான் ஒரு நிர்வாகத்திறமை உள்ளவர் என்பதை நிரூபித்துவிட்டார் என்று ஈராஸ் நிறுவனம் செளந்தர்யா ரஜினியை புகழ்ந்து தள்ளியுள்ளது. இதுகுறித்து அறிந்த ரஜினியும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply