அமெரிக்காவை சேர்ந்த திருநங்கை ஒருவர் தன்னுடைய பின்பாகத்தை பெரிதாக்க விரும்பி கடந்த இருபது வருடங்களில் சுமார் 100 முறை ஊட்டச்சத்து ஊசிகளை போட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள Miami, Florida, என்ற பகுதியை சேர்ந்த 42 வயது திருநங்கை பெண் ஒருவர் Tatiana Williams, என்பவருக்கு சிறுவயதில் இருந்தே மிகப்பெரிய பின்பாகத்தை அடைய வேண்டும் என்ற குறிக்கோள் இருந்ததாம். இதற்காக அவர் சட்டவிரோதமாக விற்கும் ஊசிமருந்துகளை வாங்கி இவரே போட்டுள்ளார். கடந்த 20 வருடங்களில் இதுவரை சுமார் 100 ஊசிமருந்துகளை இவர் போட்டுள்ளதாகவும், இதுதவிர ஒருசில சர்ஜரிகளையும் இவர் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது இவருடைய பின்புறம் 60இன்ச் அளவுக்கு பெரிதாக இருப்பதாகவும், இப்போதுதான் தனக்கு திருப்தியாக இருப்பதாகவும் இவர் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
ஊசிமருந்துகளை தான் பிளாக் மார்க்கெட்டில் அதிக பணம் கொடுத்து வாங்கியதாகவும், இவ்வகையான ஊசிமருந்துகளை பயன்படுத்தினால் பின்விளைவுகளும், அலர்ஜியும் சிலசமயம் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என எனது தோழிகள் பயமுறுத்தினர். ஆனால் நான் என் ஆசையை பூர்த்தி செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததால் தொடர்ந்து ஊசி போட்டுவந்தேன் என்று கூறும் Tatiana Williams, இந்த பின்பக்கத்தை பெற இதுவரை சுமார் £60,000 செலவழித்ததாகவும் கூறியுள்ளார்.
















