மூளை ஆபரேஷன் நடந்தபோது வயலின் வாசித்துக்கொண்டிருந்த இஸ்ரேல் பெண். அதிர்ச்சி வீடியோ

brain-opஇஸ்ரேல் நாட்டில் உள்ள வயலின் வாசிக்கும் பெண் ஒருவருக்கு மூளை சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை நடந்தபோது அவருடைய விருப்பத்தின் பேரில் அவர் அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருந்தபோதே வயலின் வாசித்தார். இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது.

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த Naomi Elishuv என்ற பெண் அங்குள்ள Lithuanian National Symphony Orchestra, என்ற குழுவில் வயலின் வாசிக்கும் கலைஞராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மூளைப்பகுதியில் ஏற்பட்ட ஒரு கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். அறுவை சிகிச்சையின் போது தான் வயலின் வாசிக்க வேண்டும் என்ற தனது ஆசையை Naomi Elishuv மருத்துவர்களிடம் தெரிவித்தார். மருத்துவர் குழு நீண்ட ஆலோசனைக்கு பிறகு அவர் வயலின் வாசிக்க அனுமதி கொடுத்தனர்.

ஒரு பக்கம் தலையின் மண்டை ஓட்டை பிளந்து மூளை ஆபரேஷன் நடந்து கொண்டிருந்தபோது இன்னொரு பக்கத்தில் அவர் வயலின் வாசித்துக்கொண்டிருந்தார். இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. நமது தேடிப்பார் வாசகர்களுக்காக நாம் அந்த அபூர்வ வீடியோவை இங்கு பதிவு செய்துள்ளோம்.

Tags: , ,

Leave a Reply