ஜனாதிபதி தேர்தலுக்கு முன் TNAயுடன் பேச்சுக்கு சாத்தியமிலை– மோடியை சந்திப்பதற்கு மகிந்த அடம்பிடிப்பு; நிகழ்ச்சி நிரல் மாற்றம்?

Mahinda10ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக அரச தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளதாக சுட்டிக்காட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள கொழும்பின் முக்கிய ஊடகம் ஒன்று ஐ.நா கூட்டத்தொடரின் போது இந்திய பிரதமரை சந்தித்து விட வேண்டுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிடிவாதமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐக்கிய நாடுகளின் 69 வது கூட்டத்தொடரின் போது இந்திய பிரதமர் நரேந்திரமோடியை சந்திப்பதற்கான அனுமதியை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

எனினும் இந்த சந்திப்பு நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளதாக புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஜிரிஎன் நிகழ்ச்சிநிரல் இதற்க்கு இடம் அளிக்கவில்லை என அவை இலங்கைக்கு தெரிவித்துள்ளன.

இதனை தொடாந்து மோடியை சந்திப்பதற்க்கு ஏதுவான விதத்தில் இலங்கை ஜனாதிபதியின் நிகழ்ச்சிநிரலை மாற்றியமைப்பதற்க்கு வெளிவிவகார அமைச்சு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இரு தலைவர்கள் மத்தியிலான சந்திப்பிற்க்கு சாத்தியம் இருப்பதாக வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் இந்திய பிரதமருடனான சந்திப்பே மோடியை சந்திப்பதற்கான ஆவலை ஜனாதிபதியிடம் ஏற்படுத்தியுள்ளது.

ஜனதிபதி மகிந்த ராஜபக்ச இந்தச் சந்திப்பிற்கான ஆரம்ப வேலைகளை இந்து நாளிதழிலுக்கு வழங்கிய பேட்டி மூலமாக ஆரம்பித்துள்ளார். ஜனாதிபதியை பேட்டி கண்டவர் சுப்பிரமணிய சுவாமியின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பேட்டியில், பொலீஸ் அதிகாரம் தவிர ஏனையவை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் பேசுவதற்க்கு தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில், பாராளுமன்ற தெரிவுக்குழு ஊடாகவே பேச்சுவார்த்தைகள் இடம்பெறவேண்டும் என ஜனாதிபதி வற்புறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து அவர் விலகிவிட்டாரா என்பது தெளிவாக தெரியவில்லை.

இதேவேளை ராஜபக்சா மோடியை சந்தித்தாலும் கூட அந்த சந்திப்பு அவருக்கு தர்மசங்கடமானதாக அமையலாம், தனது பதவியேற்பு நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற சந்திப்பின் போது தான் சுட்டிக்காட்டிய விடயங்களில் முன்னேற்றம் ஏற்படாததை மோடி சுட்டிக்காட்டலாம்.

மேலும் ஜனாதபதி தேர்தலுக்கு முன்னதாக அரச தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளன. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: ,

Leave a Reply