கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத்தலைநகர் பீஜிங் நகருக்கு சென்ற MH370 என்ற விமானம் பாதை மாறி சென்று மாயமாய் மறைந்தது. அதில்பயணம் செய்த 239 பயணிகளின் கதி என்னவென்று இதுவரை தெரியவில்லை. விமானம் கடலில் விழுந்ததா?அல்லது தீவிரவாதிகள் கடத்தினார்களா? என்று பல்வேறு குழப்பத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது இந்திய பெருங்கடலில் ஒருசில வித்தியாசமான கடினமான பொருட்கள் கிடைத்துள்ளதாகவும், அவரை விமானத்தின் பாகங்களாக இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
MH370 விமானத்தை அசராமல் தேடிவரும் ஆஸ்திரேலிய மீட்புப்படையினர் இந்திய பெருங்கடலில் 58 வித்தியமான பொருட்களை நேற்று கண்டுபிடித்துள்ளனர். இந்த பொருட்கள் யாவும் விமானத்தின் பாகங்கள் போல் தெரிவதால் இது MH370 விமானத்தின் உதிர்ந்த பாகங்களாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த பொருட்கள் இன்று மலேசிய அனுப்பி வைக்கப்பட்டு சோதனை செய்யப்படும் என மீட்புப்படையினர் கூறியுள்ளனர். இந்த தகவலை மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் Liow Tiong Lai அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.
மாயமான விமானத்தை தேடும் பணியில் ஆஸ்திரேலியாவும் மலேசியாவும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் இந்த புதிருக்கான விடை கிடைத்துவிடும் என Liow Tiong Lai மேலும் கூறியுள்ளார்.
















