வட மாகாண முதலமைச்சர் அரசுடன் ஒத்துழைப்பதில்லை இதனால் அங்கு ள்ள மக்களே பாதிக்கப்படுகின்றனர் என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் மேயர் எதிர்க் கட்சியாக இருந்த போதிலும் மக்களின் தேவைகளை கருத்திற் கொண்டு ஒத்துழைப்புக்களை வழங்குகின்றார். இதன் காரணமாக கொழும்பை அபிவி ருத்தி செய்யவும் பாரிய மாற்றத்தை ஏற்ப டுத்தவும் முடிந்தது.
அரசியலுக்கு அப்பால் செயற்படும் போதே மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியும். இந்த யுகத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிர தேச நகரம் பாரிய எழுச்சியைக் கண்டுள்ளது. மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படுவதிலிருந்து தற்போது பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொது மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம். பொருளாதாரம் போன்றவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள மக்கள் நகரமயமாக்கல், நகர அபிவிருத்தியினை உச்சகட்டமாக அனுபவித்து வருகின்றனர். 2020 இலங்கையில் மக்களின் தொகை மேலும் அதிகரிக்கலாம். இந்நிலையில் இந்த நகர எழுச்சித்திட்டம் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது.
எமது நாட்டின் கொழும்பு உட்பட அதனை அண்மித்த பிரதான நகர் பகுதிகள் மழை மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக நீரில் மூழ்கியது. பாராளுமன்றம் கூட நீரில் மூழ்கியது.
இதனை கருத்திற்கொண்டு பாதுகாப்பு அமைச்சு உலக வங்கியின் உதவியுடன் கொழும்பு நகர்ப்புற அபிவிருத்தி வேலைத்திட்டத்தை திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுத்தது. இதன் பயனாக தற்பொழுது கொழும்பு நகர் நீரில் மூழ்குவதில்லை. கால்வாய்கள், பேர வாவிகள், வடிகான்கள் முழுமையாக புனரமைக்கப்பட்டு நவீன மயப்படுத்தப்பட்டுள்ளதுடன், அழகிய தோற்றத்தில் கொழும்பு காட்சியளிக்கின்றது.
கொழும்பை போன்று காலி, மாத்தறை, நுவரெலியா, நகரங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. மேலும், கண்டி, யாழ்ப்பாணம். மட்டக்களப்பு, குருநாகல் மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
















