மகிந்த ராஜபக்சவின் ஐநா உரை செப்24க்கு மாற்றம் : வட அமெரிக்க தமிழர்களின் பொங்குதமிழ் நிகழ்வும் மாற்றம்…!!

ponguthamil_நியூ யோர்க் ஐ.நா பொதுச்சபையில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச செப் 24ம் நாளே உரையாற்றுவார் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மகிந்தவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொங்குதமிழ் நிகழ்வும் 24ம் திகதியே இடம்பெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கான எதிரான சிறிலங்கா அரசின் இனவழிப்பினை அம்பலப்படுத்தி, சிறிலங்கா அரசுத் தலைவருக்கு எதிரான வலுவான குரலினை பதிவு செய்வதோடு, ஈழத்தமிழர்களுக்கான பரிகார நீதியினை அனைத்துலக சபையின் முன் உரத்துக்கோருவதற்குமாக இந்த பொங்குதமிழ் எழுச்சி ஒன்றுகூடல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னர் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச செப்ரெம்பர் 25ம் நாளன்றே உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.தற்போது முதன்நாளே மாலை உரையாற்றுவதற்கான நேரம் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் (நியூ யோர்க்) தமிழர்களின் ஒன்றுகூடல் மதியம் 1 மணி முதல் இடம்பெற ஏற்பாடாகி வருகின்றது.

இந்தியாவில் புதிதாக ஆட்சிபீடமேறியுள்ள புதிய அரசாங்கத்தின் பிரதமரான நரேந்திர மோடி அவர்களும், சபையில் பங்கெடுக்க இருப்பதனால், முக்கியத்துவம் கொடுத்து இந் எழுச்சி ஒன்கூடலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துவருகின்றது.

அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலும் இருந்து மக்கள் பங்குபற்றுவதற்கான வழிமுறைகளோடு, கனடாவில் இருந்தும் மக்கள் பங்கெடுப்பதற்கான குறித்த 416-751-TGTE) / (416) 648-3373 /416-830-4305 இந்த தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழகத்தில் 150க்கும் மேற்பட்ட தமிழர் இயக்கங்களை ஒன்றிணைத்த தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் தமிழ் மக்கள் நீதிப்பேரணியும் செப்24ம் நாளன்றே இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

Leave a Reply