மீனவர் பிரச்னைக்கு மிகவிரைவில் தீர்வு வரும்”ஆஸி,யில்- இல.கணேசன்

ila-ganeshanஆஸ்திரேலியா வருகை தந்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு மற்றும், ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர், தமிழ்நாட்டின் மூத்த தலைவரான இல.கணேசன் தெரிவித்துள்ளார்

அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது.

ஒரு பெரிய மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் இலங்கை அதிபர் மஹிந்த ராயபக்ஸ அவரை அழைத்திருந்தோம் அவரை மட்டும் அல்ல சார்க் நாட்டில் உள்ள தலைவர்கள் அனைவரயும் அழைத்திருந்தோம் அந்தவகையில் இலங்கை அதிபரையும் அழைத்தோம்.

இலங்கை அதிபர் அவர்களது பக்கத்தில் உள்ள நல்ல சமிச்சையாக இந்தியா வருவதற்கு முதல் அணைத்து மீனவர்களையும் விடுதலை செய்து இருந்தார் அது போன்று எங்களது பக்கம் நாங்கள் அவரை அழைத்தது நல்ல ஒரு சமிச்சை இருந்தது .

முன்னைய சூழலையும் பார்க்க தற்போது சிறிய மாற்றம் இருக்கின்றது காரணம் மீனவர்கள் கொள்ளப் பட்டனர், சித்திரவாதை செய்யப் பட்டனர், 70தொடக்கம் 80 நாட்கள் சிறைப் பிடிக்கப் பட்டனர் தற்போது அந்த நிலை மாறியுள்ளது.

இப்போது எந்த மீனவர்களும் கொள்ளப் பாடவும் இல்லை அதிகமாமாக சிறையில் இருந்த நாட்கள் என்றால் 7 நாட்களே ஆகும்

இந்த பிரச்னை இலங்கை அதிபருக்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் உள்ள பிரச்னை அல்ல ,வடமாகான முதலமைச்சருக்கும் தமிழக முதலமைச்சருக்கும் உள்ள பிரச்னை அல்ல இது மீனவர்கள் பிரச்னை.

இந்த மீனவர் பிரச்னை எங்கு உள்ளது என்பது தற்போது தெரிந்து விட்டது அகவே இலங்கை இந்திய மீனவர்களுக்கு தீர்வு வந்துவிடும் என நம்புகின்றேன் .

இந்த மீனவர் பிரச்சனைக்கு மிக விரைவில் தீர்வு கிடைக்க வேண்ண்டும் என்று அமைச்சர் சுஸ்மித சுபராஜ் அவர்களும் ஆர்வமாக இருக்கின்றார்.

இதுவே ஒரு பாரிய மாற்றம் அதே போன்று தேசிய அளவிலும் தமிழக மட்ட அளவிலும் 5 பேர் அழைக்கப் பட்டு பேசியிருந்தார்.

இந்த மீனவ பிரச்சனைக்கு மிக விரைவில் தீர்வை ஏற்ப்படுத்த வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார் எனவும் தெரிவித்திருந்தார்.

Tags: , ,

Leave a Reply