பிரபாகரன் எங்களது ஒவ்வொரு தகவலையும் இடைமறித்துக்கேட்டார் அவர் எங்களுக்கு முன்னரே செயற்பட்டார் – நட்வர் சிங்

pirabaஇலங்கையின் வடபகுதியை தமிழகத்தின் ஓர் அங்கமாக எம்.ஜீ.ஆர். கருதினார் – நட்வர் சிங்

இலங்கையில் சதிப்புரட்சி இடம்பெறலாம் என அஞ்சிய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன இந்தியாவின் உதவியை நாடினார் என முன்னாள் இந்திய வெளிவிவகார அமைச்சர் நட்வர்சிங் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் காணப்படும் குழப்பங்களை தவிர்த்திருக்க முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர்-ஆரம்பத்திலிருந்தே பல தவறுகள் இடம்பெற்றுள்ளன, புதுடில்லிக்கென ஒரு கொள்கை காணப்பட்டது அதேவேளை முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜி இராமச்சந்திரன் வடஇலங்கை தமிழ்நாட்டின் ஒரு பகுதி என்ற கொள்கையை பின்பற்றினார்.

நாங்கள் குழப்பத்திற்க்குள் சிக்குண்டோம், பிரபாகரன் எங்களது ஒவ்வொரு தகவலையும் இடைமறித்துக்கேட்டார் அதனால் அவர் எங்களுக்கு முன்னரே செயற்பட்டார்.

ராஜீவ் காந்தி நல்லவர் 1991 அளவில் அவருக்கு தான் செய்த தவறுகள் தெரிந்திருந்தன என நட்வர்சிங் குறிப்பிட்டார்.

nadver-singhஇலங்கையின் வடபகுதியை தமிழகத்தின் ஓர் அங்கமாக எம்.ஜீ.ஆர். கருதினார் – நட்வர் சிங்

இலங்கையின் வட பகுதியை தமிழகத்தின் ஓர் அங்கமாகக் கருதி முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜீ. ராமசந்திரன் செயற்பட்டார் என முன்னாள் இந்திய வெளிவிவகார அமைச்சர் நட்வர் சிங் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ரூபா பதிப்பகமும் சென்னை புத்தக கழகமும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.

நட்வர் சிங் ‘ஒரு உயிர் போதுமானதல்ல’ என்ற சர்ச்சைக்குரிய நூலின் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் தீர்மானங்கள் ஆரம்பம் முதலே பிழையானதாக அமைந்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மத்திய அரசாங்கம் ஒரு விதமான கொள்கையை பின்பற்றியதாகவும், தமிழக மாநில அரசாங்கம் மற்றுமொரு கொள்கையை பின்பற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக மாநிலத்தின் ஒர் பகுதியாக இலங்கையின் வடக்கை உள்வாங்கிக் கொள்ளும் வகையில் முன்னாள் முதல்வர் எம்.ஜீ.ஆர். செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் பீதியடைந்த இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, இந்திய மத்திய அரசாங்கத்தின் அவசர உதவியை நாடியிருந்தார் எனத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியுடன் இந்த விடயம் குறித்து பேசி, உதவி கோரியிருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அனைத்து தகவல்களும் முன்கூட்டியே கிடைக்கப்பெற்றதாகவும், அதற்கு அமைய அவர் காய் நகர்த்தல்களை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி மிகச் சிறந்த ஓர் மனிதர் எனவும், 1991ல் ராஜீவில் மாற்றம் ஏற்பட்டதாகவும், தாம் இழைத்த தவறுகளை அவர் புரிந்து கொண்டதாகவும் நட்வார் சிங், தெரிவித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply