இந்தியாவில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் அழிப்பு

LTTE 1_CIநாகை மாவட்டத்தில் 1985ம் ஆண்டு தமிழக அதிரடி படையினரால் கைப்பற்றப்பட்ட விடுதலை புலிகளின் ஆயுதங்கள் நேற்றைய தினம் அழிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம், கோடியக்கரை காட்டுப் பகுதியில் தமிழீழ விடுதலை புலிகள் வெடி பொருட்களைப் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, 1985ல், தமிழக அதிரடிப் படை பொலிசார், அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது காட்டுப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 250 கைக் குண்டுகள், 166 டெட்டனேட்டர்களை கைப்பற்றி, நாகை ஆயுதப்படை மைதானத்தில் பாதுகாத்து வந்தனர்.

உயிர் ஆபத்துக்களை ஏற்படுத்தும் வெடி பொருட்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் அடங்கிய குழுவினர், நேற்று நாகை, பாலையூர் அருகே பலத்த பாதுகாப்புடன் வெடி பொருட்களை அழித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply